ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு ! இன்று மீண்டும் தொடங்குகிறது

The medical consultation for the general public, which was postponed due to the storm, is set to resume today.

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று  மீண்டும் தொடங்க உள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை  இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் காரணமாக நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

அதாவது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை அதாவது இன்று நடைபெறும் என அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ,சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.