பாலிடெக்னிக் முடித்தவர்கள் அரசு,அரசு உதவிபெறும் பொறியியல் உள்ளிட்ட கல்லுரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும்,ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:”தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு,அரசு உதவிபெறும்,அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள்,அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள்:
விண்ணப்பிக்கும் முறை :
www.accet.co.in/www.accetedu.in/www.tnlea.comஎன்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் :
இன்று முதல் தொடங்கி வருகின்ற 23.07.2022 முடிவடையும்.
பதிவுக் கட்டணம் :பதிவுக் கட்டணம் ரூ.300-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary, Second year B.E./B.Tech.Degree Admissions 2022-23, ACGCET,Karaikudi” payable at Karaikudi” என்ற பெயரில் 24.06.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கும்,விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக் கொள்ளலாம்.
அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும்,இந்த கல்வியாண்டில் Second Year B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
மேலும் விவரங்கள் அறியwww.tnlea.com/www.accet.co.in/www.accetedu.inஆகிய இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.மேலும்,விவரங்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்′ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node