#Breaking:இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Holidays have been declared today for schools and colleges in the following districts due to heavy rains.

கனமழை காரணமாக இன்று கீழ்க்கண்ட இரண்டு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும்,3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இதனால், பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், கனமழை காரணமாக,இன்று தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,நெல்லை,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking:இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!