11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு;லிங்க் இதோ – முதல் 3 இடம் பிடித்த மாவட்டங்கள் எவை தெரியுமா?..!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம்

தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம் தேதி) அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி,தேர்வர்கள்http://tnresults.nic.in&http://dge.tn.gov.inஎன்றஇணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,தமிழகம்,புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு எழுதிய நிலையில்,7,79,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக பொதுத்தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.13% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும்,தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.27% அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன  எனவும்,அதே சமயம்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.56% எடுத்து பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.அதைப்போல,95.44% உடன் விருதுநகர் இரண்டாவது இடத்திலும்,95.25% உடன் மதுரை 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.

இதனிடையே,ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம்,பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும்,தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.