தண்ணீர் தர தாமதமானதால் ஆத்திரத்தில் வயதான மனைவியை அடித்துக் கொன்ற முதியவர்

An elderly man has been arrested for beating his wife to death in anger after his elderly wife was late fetching water.

வயதான மனைவி தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 77 வயதுடைய தங்கவேல் என்பவரின் மனைவிதான் 60 வயது காளியம்மாள். வயதான தம்பதிகள் இருவரும் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று சாப்பாடு நன்றாக இல்லை என தங்கவேல் தனது மனைவியிடம் வாக்குவாதம் பண்ணி உள்ளார்.

அதன் பின் தங்கவேல் குடிக்கத் தண்ணீர் கேட்ட பொழுது, வயதான காளியம்மாள் தண்ணீர் எடுத்து வர தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல் காளியம்மாளை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சுவற்றில் மோதியபடி விழுந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.