தமிழக அரசால் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 28 யானைகள் பங்குபெற்று முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் ஏராளமான யானைகள் வந்து குளித்து மகிழ்ச்சியடைந்தன.
unknown nodeதமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள், முகாமில் கலந்து கொண்டுள்ளன. இதில் மொத்தமாக 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
unknown nodeஇந்நிலையில், இந்த முகாமில் யானைகள் புத்துணர்ச்சி பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, யானைகள் உற்சாகமாக குளிக்கும் வகையில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட யானைகள் குளியளிட்டு மகிழ்ச்சியடைந்தன. இது அனைவராலும் கவரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.