அரசு தகுதி தேர்வில் வெற்றிபெற்றும் வேலை வேண்டும்.! சென்னையில் 300 பேர் உண்ணாவிரதம்.!

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 4 முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் சுமார் 30 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 4 முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் சுமார் 30 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 300 பேர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் B.Ed முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் TET தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வரையில் 4 முறை இந்த தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், இதுவரையில் அரசு பணி நியமன ஆணை வழங்கவில்லை என கூறி, மறு நியமன தேர்வை ரத்து செய்ய கோரியும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று சுமார் 300க்கும் அதிகமான TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள்அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4 முறை நடந்த தேர்வில் சுமார் 30,000க்கும் அதிகமானோர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில் இதனையும் குறிப்பிட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தயவு கூர்ந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டு வருகின்றனர்.