ஜனவரியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

TET EXAM

தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வில் பங்கேற்க வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை https://www.trb.tn.gov.in/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க டெட் எனப்படும் … Read more

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும்! TET ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

tet teachers protest

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி என TET ஆசிரியர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. TET ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டி 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று மதியம் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அமைச்சருடன் மேலும் 2 சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் … Read more

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டெட் (TET) எனும்  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், டெட் (TET) எனும்  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் … Read more

ஆசிரியர் தகுதி தேர்வு.! போட்டிதேர்வின்றி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.! ஓபிஎஸ் அறிக்கை.!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டு என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அண்மையில்  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றிருந்தாலும், போட்டித்தேர்வு வைக்கப்படும் என்ற முடிவை கைவிட வேண்டும் எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கணக்கானோர் சென்னையில் போராட்டம் நடத்தினர். தற்போது … Read more

அரசு தகுதி தேர்வில் வெற்றிபெற்றும் வேலை வேண்டும்.! சென்னையில் 300 பேர் உண்ணாவிரதம்.!

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 4 முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் சுமார் 30 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 300 பேர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் B.Ed முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் TET தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வரையில் … Read more

#BREAKING: அக்.14 முதல் 20-ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு!

அக்.14 முதல் TET தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு இரு வேளைகளில் நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணை, நுழைவு சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் … Read more

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு. வன்னியர் இட ஒதுக்கீட்டில் (TRP-PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வில் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில், ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். … Read more

#Justnow:தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – ஜூலை 6 கடைசி நாள் – பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் … Read more

TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் – அவகாசம் நீட்டிப்பு..!

TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 11 முதல் 16-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டிப்பு. TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 11 முதல் 16-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை – 06 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் / மற்றும் தாள் I (TNTET Paper I and Paper !!) 2022ஆம் ஆண்டிற்கான … Read more

ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு! – விரைவில் அரசாணை!

இதன் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு என தகவல். அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2013-ஆம் ஆண்டுக்கு முன் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு … Read more