காலமானார் காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் !

இன்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால்  காலமானார்.

இன்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால்  காலமானார்.

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு வயது 83.சங்கரமடம் அருகே உள்ள சங்கரா மருத்துவமனையில் இன்று காலை அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக  தெரிவித்தனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பொறுப்பாளர் நடன சாஸ்திரி ஜெயேந்திரர் காலமானதை உறுதிப்படுத்தினார். தகவல் அறிந்து சங்கர மடத்தின் அருகே பக்தர்கள் பொதுமக்கள் திரண்டதையடுத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயேந்திரரின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்ககாக சங்கர மடத்தில் வைக்கப்படுகிறது. ஜெயேந்திரர் காலமானதையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது, ஏகாம்பரேஸ்வரர் கோவில், குமரகோட்டம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் நடையும் சாத்தப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.