ஐபிஎல் இல் போட்டிகளை அதிகரிக்க உள்ளதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுதும் பல கோடி ரசிகர்களைப்பெற்று வெற்றிகரமாக 15 சீசன்கள் முடிந்துள்ளன. அனைத்து நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடருக்காக தங்களது பெயரை ஏலத்திற்காக கொடுத்து வருகின்றனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் 2022 ஆம் ஆண்டு 2 அணிகள், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சேர்க்கப்பட்டன.
இந்த 2022 சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. தற்போது இந்த ஐபிஎல் தொடரில் போட்டிகளை அதிகரிக்க உள்ளதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இரண்டு வருட சீசனுக்கும் போட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 74 போட்டிகளாகவும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 84 போட்டிகளாகவும், 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 94 போட்டிகளாகவும் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.