புஜாராவை ஏலத்தில் எடுத்த சென்னை அணி.. "வருக வருக" என உற்சாகப்படுத்தும் ரசிகர்கள்!

The Team Chennai Super Kings have acquired Indian Test cricketer Pujara for Rs 50 lakh amid a bid for the IPL 2021 series.

ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.50 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான 14 வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம், இன்று மாலை 3 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வருகின்றன.

அப்பொழுது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,ஆரம்ப விலையான ரூ.50 லட்சத்திற்கு எடுத்தது. மேலும், 2014 ஆம் ஆண்டிற்கு பின் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் புஜாரா கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

unknown node

புஜாராவை சென்னை அணியில் எடுத்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பலர், அவரை சென்னை அணிக்கு வருக வருக என வரவேற்றனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல் ஏலம் நடக்கும் இடத்தில் இருந்த மற்ற அணியின் நிர்வாகம், புஜாராவை சென்னை எடுத்ததற்காக கைதட்டி வரவேற்றது. டெஸ்ட் தொடரில் சத்தங்களை குவித்த புஜாரா, தற்பொழுது ஐபிஎல் தொடரிலும் கலந்துகொள்ளவுள்ளது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.