பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்கும் ஐதராபாத் தொடக்க வீரர்கள்!பைர்ஸ்டோவ் அதிரடி அரை சதம்

Bairstow's action is half a hundred

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத்  அணி வீரர் ஜானி பைர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.

இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வில்லியம்சனுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

unknown node

இதன் பின்னர்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பைர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.ஆரம்ப முதலே  இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.ஜானி பைர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.10 ஓவர்கள் முடிவில்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் அடித்துள்ளது.களத்தில்  ஜானி பைர்ஸ்டோவ் 66*(3- சிக்ஸர்கள்,9-பவுண்டரி),டேவிட் வார்னர் 38(1சிக்ஸர்கள்,2-பவுண்டரி) ரன்கள் அடித்துள்ளனர்.