டிக்கெட் விலை 99 ரூபாய் மட்டுமே.! எங்கு? எப்போது தெரியுமா?

Cinema Lovers Day

டிக்கெட் விலை : வெறும் ரூ.99-க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கலாம் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் (மே 31ஆம் தேதி) மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில், மே 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.99 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) இன் இந்த அறிவிப்பானது PVR, INOX மற்றும் Cinepolis உட்பட நாடு முழுவதும் உள்ள 4,000 திரைகளுக்குப் பொருந்தும். இது திரைப்படக் காதலர்களுக்கு இந்த சலுகை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய Bookmyshow மற்றும் PayTM போன்ற இணையதளங்களை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான படங்கள் மற்றும் அதற்கான நேரத்தை தேர்வு செய்து பணத்தை அதன் வழியாக செலுத்திவிட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பு: பொதுவாக ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் கூடுதலாக இருக்கும். இதனால், டிக்கெட்களை நேரடியாக திரையரங்கிற்கு சென்று அங்கிருக்கும் கவுன்டரில் டிக்கெட்டை பெறுவதன் மூலம் கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi