செல்வராகவனின் அடுத்தப் படம் இவருடன் தானா .? அவரே வெளியிட்ட ட்வீட் பதிவு .!

It has been reported that Dhanush will be starring in the next film to be made in the Selvaragavan direction.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அது அவர் வெளியிட்ட ட்வீட் பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இயக்குனர் செல்வராகவன் பல தரமான படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.கடைசியாக இவரது இயக்கத்தில் சூர்யாவின் என்ஜிகே படம் வெளியாகியது.மேலும் இவர் தற்போது கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார் .

இவர் தனது தம்பி தனுஷூடன் இணைந்து பல ஹிட் படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.அந்த வகையில் இப்போதும் ரசிகர்கள் இந்த கூட்டணியை காண எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .அதிலும் பல ரசிகர்கள் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 எப்போது என்று கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது .அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் D-யுடன் இணையும் போது அது எப்போதும் ஸ்பெஷல் தான் என்று குறிப்பிட்டுள்ளார் .இதனை பார்த்த ரசிகர்கள் D என்றால் தனுஷூடன் தானே உங்களது அடுத்த படம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதனுடன் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் புதுப்பேட்டை 2 என்றும் கூறி வருகின்றனர்.

unknown node