#BREAKING: அரசியல் கட்சி தொடங்கினாரா நடிகர் விஜய்.?

நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு விண்ணப்பத்தில், கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகவுள்ளது.

தற்போது இது குறித்து, விஜயின் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமது மறுப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இதோ….

unknown node