ப்ரோமோஷன் சரி இல்லைனு யார் சொன்னது? தங்கலான் குழு எடுத்த அதிரடி முடிவு!!

Chiyaan Vikram

தங்கலான் : பொதுவாகவே ஒரு படத்திற்கு ப்ரோமோஷன் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்றே சொல்லலாம். ஏனென்றால், சமூக வலைத்தளங்களை பொறுத்தவரையில் பாடல்களை வெளியீட்டு ப்ரோமோஷன் செய்துவிடலாம். ஆனால், வெளியே பல இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தால் மட்டும் தான் படம் வெளியாவது என்பது பலருக்கும் தெரியும்.

ஒரு சில படங்களுக்கு சரியாக ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் சில படங்கள் சரியாக ப்ரோமோஷன் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் வந்துவிடும். அப்படி தான் தற்போது தங்கலான் படத்திற்கு விமர்சனம் வந்தது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இன்னும் ப்ரோமோஷன் பணிகள் தொடங்காமல் இருந்த காரணத்தால் என்ன ஆச்சு ப்ரோமோஷன் தொடங்கவில்லை ப்ரோமோஷன் சரி இல்லை என்பது போல விமர்சனங்கள் எழுந்தது.

இதனையடுத்து, தற்போது தங்கலான் படக்குழு முழுவதுமாக ப்ரோமோஷனில் இறங்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 4 – ஹைதராபாத், ஆகஸ்ட் 5 – சென்னை, ஆகஸ்ட் 6 – பெங்களூர், ஆகஸ்ட் 7 – மும்பை, ஆகஸ்ட் 9 – கொச்சி என இடங்களுக்கு சென்று படத்தினை ப்ரோமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்