தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

It is said that Malayalam actor Jayaram was the first to play the role of Arvind Sami as Rajinikanth's brother in the film Thalapathy.

தளபதி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது மலையாள நடிகர் ஜெயராம் என்று கூறப்படுகிறது.

கடந்த 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலில் அள்ளி குவித்த திரைப்படம் “தளபதி”.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி.

இதில் ரஜினிகாந்திற்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார் .ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயராம் என்று கூறப்படுகிறது.ஆனால் தளபதி படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவன் தான் அரவிந்த் சாமி அவர்களின் புகைப்படத்தை காண்பித்ததாகவும் ,அவர் கலெக்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் அரவிந்த் சாமி அந்த கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.