என்னமோ நடக்குதுங்க! கடவுளை கும்பிடுங்க – நடிகர் வடிவேலு

காவல்துறைக்கு ஆதரவு அளிக்குமாறு வீடியோ வெளியிட்ட நகைசுவை நடிகர் வடிவேலு.

காவல்துறைக்கு ஆதரவு அளிக்குமாறு வீடியோ வெளியிட்ட நகைசுவை நடிகர் வடிவேலு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை  கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை, காவல்துறையினர் கண்டிக்கவும் செய்கின்றனர். பிரபலங்கள் பலரும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், நகைசுவை நடிகர் வடிவேலு, இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார்.

அந்த வீடியோவில், ‘என்னமோ நடக்குதுங்க, கடவுள் இறங்கிட்டான். கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். எல்லாரும் பாஸ் ஆகிவிட வேண்டும் என்றும், காவல்துறைக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்,  நல்லா கடவுளை கும்பிடுங்க.’ என தெரிவித்துள்ளார்.