இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சேரன், சென்னை கமலா திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு, ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற தலைப்பில் ஒரு விழாவையே எடுத்துள்ளனர்.அந்த விழாவில் பேசிய சேரன், ‘நான் படம் பார்க்க வந்தேன். இப்படி பாராட்டு விழா நடத்துவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அதற்க்கு நன்றி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி சொல்லி தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.
unknown nodeஇதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி கூறியே நான் பிக்பாஸ் விழாவுக்கு சென்றேன். இளைய தலைமுறைக்கு உங்களை தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் நுழைவீர்கள். எனவே, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.’ என விஜய் சேதுபதி கூறியதாகவும், விரைவில் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.