கல்யாண தேதி குறிச்சாச்சு.! விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர்களாக..,

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

unknown node

இது குறித்து, நயன்தாரா கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

unknown node

இந்நிலையில், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருப்பதியில் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும், ஜூன் 9-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.