இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
unknown nodeநீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் முதல் பாடல் டீசர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஅதன்படி, இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்களேன்-சமந்தாவுக்கு வந்த சோதனை.! விசித்திர நோயால் வெளிநாடு செல்ல திடீர் திட்டம்.!
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து அதற்கு அடுத்த தினத்தில் தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இரண்டு படங்களில் எந்த படம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
We are extremely happy to announce that #NaaneVaruvean is releasing worldwide on September 29th! @dhanushkraja @selvaraghavan @thisisysr @theedittable @omdop @Rvijaimurugan @saregamasouth pic.twitter.com/nUMH73nVPr
— Kalaippuli S Thanu (@theVcreations) September 20, 2022