ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்! கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்!

ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் தளபதி விஜயை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வருமான அவரித்துறையினரின் இந்த செயல் விஜய் ரசிகர்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர்களது இந்த செயல் அரசியல் தந்திரமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விஜய்யிடம் கூறுவது போல் அச்சிடப்பட்டுள்ளன.

unknown node

மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இந்த போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. தளபதி ரசிகர்களின் இந்த அதிரடியான செயல், அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.