அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
unknown nodeபடத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக சாமி…சாமி பாடல் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடலில் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா இருவரும் இணைந்து அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்கள்.
unknown nodeஇதனால் ரஷ்மிகாவை போலவே பலரும் நடனமாடி தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டனர். அந்த வகையில், இந்த (சாமி…சாமி) பாடலுக்குக் ஒரு பள்ளியில் உள்ள குழந்தைகள் குழுவாக நடனமாடிக்கொண்டிருக்க, ஒரே ஒரு சிறுமி மட்டும் அட்டகாசமான தன்னுடைய ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
இதையும் படியுங்களேன்-முதல் முத்தம் நியாபகம் இருக்கா..? திவ்யபாரதி கொடுத்த “நச்” பதில்.!
unknown nodeஅவர் நடனம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், அதனை பார்த்த ராஷ்மிகா தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் “என்னுடைய இன்றைய நாள் இதுதான். இந்த க்யூட்டியை நான் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்,எப்படி ?” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node