சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவை தாக்கிய சிட்டி ..முத்து என்ன செய்தார் தெரியுமா?.
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 18] எபிசோடில் ஸ்ருதி வாழ்க்கைக்கு வரப்போகும் சிக்கல்.. மீனாவின் மண்டையை உடைத்தார் சிட்டி..
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 18] எபிசோடில் ஸ்ருதி வாழ்க்கைக்கு வரப்போகும் சிக்கல்.. மீனாவின் மண்டையை உடைத்தார் சிட்டி..
ரவியோட ரெஸ்டாரண்டுக்கு ஓனரோட ஃபேமிலிய கூப்பிட்டு வராரு இப்போ ஒர்க்கர்ஸ் எல்லாரையுமே கூப்பிட்டு அவங்கள அறிமுகம் பண்ணி வைக்கிறாரு.. ஆல்ரெடி என்னோட வைஃபை எல்லாருக்குமே தெரியும்.. இது என்னோட பொண்ணு ஃபாரின்ல படிச்சிட்டு இப்பதான் ஊருக்கு வந்தா .. இனிமே பிசினஸ இவ தான் பார்த்துக்க போறா..ரவி தான் இந்த ஹோட்டலோட செஃப் அப்படின்னு அவங்க பொண்ணுகிட்ட அறிமுகப்படுத்துறாரு ரவி ஹோட்டலை சுத்தி காட்டிடுங்க அப்படின்னு கிளம்பிடறாங்க.. ஓனரோட பொண்ணு ரவிக்கு கை கொடுக்குறாங்க இந்த டைம்ல சுருதி அங்க வராங்க.. ஸ்ருதிய பார்த்த ரவி அவங்க கிட்ட பேசுறாங்க.. சுருதி இது என்னோட ஓனரோட பொண்ணு அப்படின்னு அவங்களையும் சொல்றாங்க..
இப்ப ஓனரோட பொண்ணு எல்லா ஒர்க்கர்ஸையும் கூப்பிட்டு என்ன உங்க பாஸ் மாதிரி பாக்காதீங்க ஃப்ரெண்ட்லியா பேசுங்க ஆனா அதுக்காக அட்வான்டேஜ் எல்லாம் எடுத்துக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க இதை பார்த்துக்கொண்டே இருக்கிற சுருதி இவ என்ன இப்படியும் சொல்ற அப்படியும் சொல்லுற அப்படின்னு நினைக்கிறாங்க.. இப்போ ரவியை மட்டும் கூப்பிட்டு ரொம்ப பாராட்டுறாங்க ஐ இம்ப்ரஸ் வித் யூ அப்படின்னு சொல்லிட்டு ஹிந்தில பேசுறாங்க உடனே ரவி எனக்கு ஹிந்தி தெரியாது மேம் அப்படின்னு சொல்றாங்க. இந்த டைம்ல சுருதி என்ட்ரி ஆகுறாங்க யாரு இவங்கன்னு கேட்க ரவி சொல்றாரு இது என்னோட வைஃப் அப்படியா உங்கள பார்த்தா கல்யாணம் ஆன மாதிரியே தெரியல அப்படின்னு கேட்டுட்டு அங்க இருந்து கிளம்பிடறாங்க..
ஸ்ருதி ரவி கிட்ட இது என்ன பாஸா இல்ல லூசா இப்படி பேசுறா .. உன்ன வேலை வாங்குவதற்காக தான் ரொம்ப பாராட்டுறா அப்படின்னு சொல்லிட்டு ரவிய ஷாப்பிங் போலாம் அப்படின்னு கூப்பிடுறாங்க ரவி எனக்கு வேலை இருக்கு சுருதி இப்போ வர முடியாது.. உடனே ஸ்ருதிக்கு கோபம் வந்து அங்கிருந்து கிளம்பிடறாங்க.. இன்னொரு பக்கம் மீனா அம்மா வீட்டுக்கு போறாங்க. அவங்க அம்மா சத்யாவை கம்பளைண்ட் பண்றாங்க சத்யா சிகரெட் குடிக்கிறான் வர வர போக்கே சரியில்ல அப்படின்னு சொல்ல மீனா சொல்றாங்க இதுக்கெல்லாம் அந்த சிட்டி தான் காரணம் நான் போய் அவனை பார்க்கிறேன் அப்படின்னு சொல்லி கிளம்புறாங்க. இன்னொரு பக்கம் ரோகினியும் வித்யாவும் அந்த பிஏவ பாக்க வராங்க .
என்ன என் பையன வச்சு மிரட்டுரியா.. கொடுக்க வேண்டியது கொடுத்தா நான் எதுவும் பண்ண மாட்டேன் கல்யாணி அப்படின்னு பிஏ சொல்றாரு.. அதுக்கு வித்யா சொல்றாங்க அதான் மாசம் மாசம் வந்து பிச்சை எடுக்குறியே ..இல்லை எனக்கு இப்ப 30 லட்சம் வேணும் இதோட நம்ம ஃபைனலா செட்டில்மெண்ட் பண்ணிக்கலாம் அப்படின்னு பி ஏ சொல்றாரு ..ஷாக் ஆனா ரோகினி அவ்ளோ பணம் என்கிட்ட இல்ல உனக்கு வேலை வேண வாங்கி தரேன் .இல்ல எனக்கு பணம் தான் வேணும் இல்லனா உன் வீட்ல வந்து உட்கார்ந்து விடுவேன் அப்படின்னு சொல்லிட்டே கிளம்பிட்டாரு. ரோகிணி வித்யா கிட்ட சொல்றாங்க நம்ம அந்த சிட்டிய தான் பாக்கணும் இவனுக்கு சிட்டி தான் சரி . இன்னொரு பக்கம் மீனா சிட்டிகிட்ட பேச போறாங்க.
சிட்டி மீனாவ ஃபர்ஸ்ட் அன்பா வா..க்கா அப்படின்னு சொல்லி வரவேற்கிறாரு.. அக்காவுக்கு டீ வாங்கிட்டு வாடா அப்படின்னு சொல்ல உடனே பொங்கி எழுறாங்க மீனா.. என் தம்பி உன்னால தான் கெட்டுப் போறான் தேவையில்லாம அவன் விஷயத்துல வராத அப்படின்னு ரொம்ப கோவமா பேச இத கேட்ட சிட்டி என் பிரண்டோட அக்கான்னு பார்க்கிறேன் ஏதோ அவனுக்கு நல்ல வேலை போட்டு கொடுத்து உட்கார வச்சா ரொம்ப பேசுறியே பேசாம போடி அப்படின்னு மரியாதை எல்லாம் பேசுறாரு .. உன்னை செருப்பால அடிச்சிடுவேன்டானு மீனா அடிக்க போக சிட்டி மீனாவை கீழ தள்ளி விட்றாரு .அந்த டைம்ல முத்து என்ட்ரி கொடுக்குறாரு சிட்டியை பளார்பளார்னு அடிச்சு கையை உடைத்து விடுகிறார் வலி தாங்க முடியாத சிட்டி கத்துறாரு..
இங்க மீனாவுக்கு தலையில அடிபட்டு ரத்தம் வருது இப்ப வேகமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறாரு . டாக்டர் பயப்படுவதற்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லிடுறாரு. மீனாவோட அம்மா கால் பண்றாங்க மீனாவை பாத்திங்களா மாப்பிள்ளைனு கேட்க நல்ல வேலை அத்தை நீங்க என்கிட்ட சொன்னீங்க இல்லன்னா அந்த சிட்டி ஏதாவது பண்ணி இருப்பான் மீனாவை கீழே தள்ளிவிட்டுடான் நான் இப்ப ஹாஸ்பிடல் தான் இருக்கேன் சின்ன அடிதான் அப்படின்னு அவங்க அம்மா கிட்ட சொல்றாங்க. இதோட இன்னைக்கு ஓட எபிசோட முடிச்சு இருக்காங்க .நாளைக்கு ப்ரோமோல வீட்டுக்கு போற மீனாவை பார்த்து என்னடி தலையில் கட்டி போட்டு இருக்க பார்த்து போக மாட்டியானு கரிசனமா விஜயா கேக்குறாங்க .. முத்து மீனாவுக்கு இது அம்மாவா இது அப்படின்னு பாக்குறாங்க சரி இன்னைக்கு நானே சமைக்கிறேன் உனக்கு தான் தலையில அடிபட்டு இருக்குதுல்ல அப்படின்னு சொல்றாங்க..