விவேக்கின் முப்பது வருடத் திரைப் பயணத்தின் சாதனை தற்போது முறியடிக்க படுகிறது!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் இந்தியன் 2.  இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் இந்தியன் 2.  இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

இப்படத்தில், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்க உள்ளனர். மேலும், தற்போது புதிதாக நடிகர் விவேக் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விவேக் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை, ஒரு படத்தில் கூட கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததில்லை. இதனை அவரே வெளிப்படையாக பல மேடைகளில் கூறியுள்ளார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது.