“டி” போட்ட விஷால்..கடுப்பாகி எச்சரித்த பவித்ரா! பிக்பாஸில் வெடித்த சண்டை!
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் இல்லாமல் இருக்குமா என்ன? வழக்கமாக இதுவரை நடந்த 7 சீசன்களில் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களுக்குப் பிறகு தான் சண்டைகள் தொடங்கும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கி 2 நாட்கள் முடிந்து 3-வது நாள் ஆகியுள்ள நிலையில், டி போட்டுக் கூப்பிட்டதால் பெரிய பஞ்சாயத்தே வெடித்துள்ளது.
அதாவது, நடிகை பவித்ராவுக்கும், விஜே விஷாலுக்கும் தான் சண்டை தொடங்கியுள்ளது. சண்டைக்கான முக்கிய காரணமே பவித்ராவை விஜே விஷால் “டி” போட்டு அழைத்தது தான். சமையல் அறையில் நின்று கொண்டு இருந்த போது விஷால் பவித்ராவை சாதாரணமாக டி போட்டு அழைத்துள்ளார். விஷால் சாதாரணமாக அப்படிச் சொன்னாலும் அப்படி அழைப்பது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை.
உடனடியாக இதற்குக் கோபப்படவில்லை என்றாலும் ” என்னை டி போட்டு கூப்பிடாதே எனக்கு அது பிடிக்கவில்லை” எனக் கூறி எச்சரித்துள்ளார். அதனைக் கண்டு கொள்ளாத விஷால் மீண்டும் டி போட்டு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சொல்லியும் கேட்கவில்லை என்பதால் பவித்ரா மிகவும் கடுப்பாகி என்னை டி போட்டுக் கூப்பிடாத என்று சொன்னால் தயவு செய்து கூப்பிடாதே எனக் கூறினார்.
இதற்குக் கடுப்பான விஷால் நான் உன்னைத் தவறான முறையில் டி போட்டுக் கூப்பிடவில்லை. என்னிடம் பழகும் அனைவரையும் நான் சகஜமாகத் தான் அப்படிக் கூப்பிடுவேன் எனக் கூறினார். அதற்கு பவித்ரா ” அப்படிக் கூப்பிடுவது எனக்குப் பிடிக்கவில்லை கூப்பிடாதே என்று 3 முறை சொல்லியும் இப்படி ஏன் சொல்கிறாய்? எனக் கேட்க இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.
நீ சொல்வதை நான் கேட்க முடியாது என ஒரு பக்கம் பவித்ரா பேச மற்றொரு பக்கம் விஷால் டி போட்டுக் கூப்பிடாத என நீ என்னிடம் சொல்லாத எனக் கூறுகிறார். எனவே, பிக் பாஸ் விடு அனல் பறக்கும் வீடாக மாறியது. ப்ரோமோ மட்டுமே வெளியாகியுள்ள காரணத்தால் இன்னும் பிரச்சினை முடிந்தது பற்றித் தெரியவில்லை . எனவே இன்றைய எபிசோடில் தான் அனைத்தும் தெரிய வரும்.
Unexpected fight pavithra vs vj vishal #BiggBossTamil #biggboss8tamil #BiggBoss pic.twitter.com/4y1gkT2K87
— Midhun Raj (@MidhunR53072058) October 9, 2024