விக்ரம் 100 வது நாள்.. ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன்.. நெகிழ்ச்சியுடன் ஆடியோ வெளியிட்ட கமல்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.

unknown node

கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்-சாண்டியுடன் குத்தாட்டம் போடும் அதிதி ஷங்கர்…வைரலாகும் வீடியோ..!

படம் வெளியாகி நேற்றுடன் 100 நாட்கள் கடந்த நிலையில், நேற்று போஸ்டருடன் அனைவர்க்கும் நன்றி தெரிவித்திருந்தது கமல் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node

அதில் ” விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் 100-வது நாளை எட்டி இருக்கிறது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் தலைமுறைகள் தாண்டி தன்னை ரசிக்கும் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன். அத்துடன் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த ஒவ்வொருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷ்க்கு அன்பும், வாழ்த்துக்களும்” என நெகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

unknown node
விக்ரம் 100 வது நாள்.. ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன்.. நெகிழ்ச்சியுடன் ஆடியோ வெளியிட்ட கமல்.!