"ஆரம்பிச்சுட்டோம்" விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம் ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன், மற்றும்  விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை படமாக்கியுள்ளார்.

unknown node

இந்த திரைபடத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.