வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்.! வைராலாகும் கோப்ரா பட ஸ்டில்.!

கோப்ரா படத்திலிருந்து விக்ரம் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோப்ரா படத்திலிருந்து விக்ரம் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை யவியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும், தும்பி துள்ளல் என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் கோப்ரா படத்தில் விக்ரமின் 21கெட்டப்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கோப்ரா படத்தில் இருந்து விக்ரமின் வித்தியாசமான ஒரு லுக் வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.