ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை செய்துவிட்டது என்றே கூறலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா என பலர் நடித்திருந்தார்கள்.
unknown nodeபடத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து படம் கடந்த ஜூலை 8-ஆம் தேதி ஓடிடியிலும் வெளியாகி மக்கள் பார்த்து வருகிறார்கள்.
unknown nodeஅப்படி இருந்தும் இன்னும் விக்ரம் படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றார்கள். உலகம் முழுவதும் இந்த படம் 430 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைதுள்ளதோ அதே அளவிற்கு தான் கேரளாவிலும் மிகப்பெரிய பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
unknown nodeஆம், கேரளாவில் இந்த திரைப்படம் தற்போது வரை 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதுவரை கேரளாவில் வெளியான எந்த படங்களும் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை. முதன் முதலாக விக்ரம் படம் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.