தெறி , மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மொத்த படக்குழுவும் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் படக்குழு நடிகர்கள் என அனைவரும் உள்ளனர்.
DINASUVADU