மீண்டும் மாஸ் கெட்டப்பில் வரும் விஜய் சேதுபதி ? மணிரத்னம் படத்தில் கெத்தான கெட்டப்…

Default Image

மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்..
இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.விஜய் சேதுபதி – சிம்பு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இந்தப் படத்திற்கான இசைக்கோர்ப்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். மணிரத்னம் படத்தில் நடிப்பது இவர்களில் பலருக்கும் முதல் முறை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக் கை கோர்க்கிறார்கள். படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்திருக்கிறாராம் மணிரத்னம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது..விஜய் சேதுபதி ஏற்கனவே சேதுபதி படத்தில் போலிசாக நடித்தது குறிப்பிடத்தக்கது …
 
 
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்