தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பிரம்மாண்ட போர் காட்சிகளை பிரம்மாண்ட செட் அமைத்து மிரளவைக்கும் அளவிற்கு படமாக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் படக்குழு வெளியிட உள்ளது. அதனால் ஒவ்வொரு மொழிகளில் இருந்தும் முக்கிய நடிகர்களை களமிறக்கியுள்ளனர். ஹிந்தியிலிருந்து அமிதாப்பச்சன் நடித்துள்ளார். கன்னடத்திலிருந்து சுதீப் நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழனாகவே நடித்துள்ளார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ராஜபாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவிக்கு விடுதலைப் போராட்டத்தில் உதவி புரியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.