மாஸ் நடிப்பில் ரசிகர்களின் மூடி சூடாமன்னன் ..! பேட்மிண்டனில் கலக்கும் மகள்..!

நடிகர் விஜய் இன்றைய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர்.அவருடைய மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் முதன்முதலில் விஜய்யோடு ஒரு பாடலில் நடனமாடி திரையுலகில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்ஷன்’ என்ற குறும்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் பிறகு வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சஞ்சய். தனது முதல் பேட்டியாக அரிமா நம்பி மற்றும் இருமுகன் மற்றும் நோட்டா போன்ற படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கரை பேட்டி எடுத்தார். இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அண்ணன் இப்படி மீடியாவில் அசத்திக் கொண்டிருக்க, தங்கை சாஷாவோ விளையாட்டில் கலக்கி வருகிறார். தற்போது விஜயின் மகள் சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்தப் பள்ளியின் பேட்மிண்டன் குழுவினரின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ முகநூல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் அந்த கலந்துகொண்ட விஜய் மகள் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024