உலகநாயகன் கமல்ஹாசனை பாலோவ் செய்த தவெக தலைவர் விஜய்!

Vijay தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 40 கோடி ரூபாய் பெட்ஜெட்டில் கட்டிட பணிகள்

kamal haasan and vijay

Vijay தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 40 கோடி ரூபாய் பெட்ஜெட்டில் கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 30 கோடி ரூபாய் செலவில் மேலும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வங்கி கடன் வாங்குவதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

READ MORE –அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளுக்கு நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த தொகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கானகாசோலையைவழங்கி இருந்தார்.

read more-விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

அவரை தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளுக்கு  1 கோடி கொடுத்து உதவி செய்துள்ளார். விஜய் 1 கோடி ரூபாய் கொடுத்ததை நடிகர் சங்கம் உதவி செய்து நன்றி தெரிவித்தும் ஒரு அறிக்கை ஒன்றையும்  வெளியீட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் “தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் திரு.விஜய் அவர்கள் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” எனகூறப்பட்டுள்ளது.

read more-தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

மேலும், நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளுக்கு வங்கி கடன் வாங்குவதற்கான  முயற்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், 15 கோடிக்கு வைப்பு தொகை செலுத்தினால் 30 கோடி ரூபாய் கடனாக தர வங்கி நிர்வாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதன் காரணமாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடி தயாராகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.