நயன்தாராவிற்க்காக ட்விட்டரில் மோதிக்கொண்ட விக்னேஷ் சிவன்

This news gives information about Vignesh Shiva who clashed with Twitter for Nayantara-Nayantaravirkaka twitteril mothikonda

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் “மீ டூ”வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை” என சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார்.

நடிகைகள் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்திய “மீ டூ” இயக்கம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. “மீ டூ” இயக்கத்தை பல நடிகைகள்  ஆதரவு கூறினார். ஆனால் சில நடிகைகள் ஒன்றும் பேசவில்லை.

சமீபத்தில்  “கொலையுதிர் காலம்” பட விழாவில் நயன்தாரா பற்றி  இரட்டை அர்த்தம்  கொண்ட வார்த்தைகளில் பேசினார் என  ராதாரவிக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நயன்தாரா  ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை வெளியிட்டார்.பின்பு ராதாரவி தாம் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில்  டுவிட்டரில் நடிகர் சித்தார்த் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார் அதில் “மீ டூ”  இயக்கத்திற்கு சிலரின் மவுனம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் இது குறித்து பேசுவது துணிச்சலான செயல் கிடையாது என கூறினார்.

மீ டூ இயக்கத்திற்கு நயன்தாரா ஆதரவு தெரிவிக்கவில்லை அதனால் சித்தார்த்  நயன்தாராவை பற்றி தான் கூறியுள்ளார் என தகவல் பரவியது.

இதற்கு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் “மீ டூ”வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை” என சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார்.