விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் ,பாடலாசிரியராகவும் வலம் வருகிறார்.இவர் இயக்கிய “நானும் ரவுடி தான்”, “தானா சேர்ந்த கூட்டம்” ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் வருகின்ற 1 -ம் தேதி தல அஜித் பிறந்த நாளை முன்னிட்டு தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்நிலையில் விக்னேஷ் சிவன் தல அஜித் பிறந்தநாள் முன்னிட்டு காமென் டிபி டுவிட்டரில் வெளியிடுவதாக இருந்தார்.
ஆனால் அவர் கூறிய நேரத்தில் வெளியிடாததால் தல ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதற்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு அதற்க்கு உரிய விளக்கமும் கொடுத்துள்ளார்.
அதில் இன்டர்நெட் இல்லாத ஒரு இடத்தில் இருந்ததால் தான் காமென் டிபி-யை வெளியிட்ட முடியவில்லை என கூறியுள்ளார்.
unknown node