சென்னை:விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு பெரிய கூட்டமே இந்த அறிவிப்பிற்காக வெயிட்டிங்கில் இருக்கிறது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்தை தவிர த்ரிஷா, அர்ஜுன் , ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’ பட ட்ரெய்லர் இன்று மாலை சரியாக 6:40 மணிக்கு டிவி-யின் யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது.
படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ட்ரைலர் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை வெளியாகும் டிரைலருடன் புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
unknown nodeஇதனால், நேற்றிலிருந்தே ‘விடாமுயற்சி’ தான் எக்ஸ் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கிடையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி , தனுஷ் இயக்கிய இட்லி கடாய் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
