சென்னை :நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை உண்டாக்கிய நிலையில், சைலண்டாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நயன்தாரா.
கடந்த 18-ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு டெல்லியில் சிம்பிளாக ட்ரீட் கொடுத்துள்ளார் அவரது கணவர் விக்னேஷ் சிவன். அட ஆமாங்க… இருவருமே ரோட்டு கடை ஒன்றில் உணவை ரசித்து உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், இவ்வளவு சிம்பிளா இவுங்க..? என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தனது விக்னேஷ் சிவனுடன் உணவருந்தும் வீடியோவை பதிவிட்டு விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅந்த பதிவில் ” இந்த பல வருடங்களில் 17 நவம்பர் அன்று மிகச்சிறிய பிறந்தநாள் கொண்டாட்டம். ஒரு பிறந்தநாள் இரவு உணவு உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், தனிப்பட்டதாகவும், நெருக்கமானதாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சக மக்களுடன் அமர்ந்திருந்து, உணவை விக்கிக்கு செல்லமாக ஊட்டிவிட்டார்நயன்தாரா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க, இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் சிவகார்த்திகேயன், நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் சந்தித்து கொண்டனர்.
குறிப்பாக, நேற்றைய தினம் நடந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் கருத்து வேறுபாடு கொண்ட இரு நட்சத்திரங்களும் (நயன் – தனுஷ்) கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
