இன்னும் 20 நாள் தான்.! சிம்பு – கெளதம் மேனன் படத்தின் புதிய அப்டேட்.!

Default Image

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் மீதமுள்ளது. அதனை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

சிலம்பரசன் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார். இந்த படம் கெளதம் மேனனின் மற்ற படங்கள் போல அல்லாமல் கிராமத்து பின்னணியில் இந்த படம் உருவாவது போல படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

ஒரு நாவலை மையப்படுத்தி இந்த கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வந்தது. தற்போது படக்குழு சென்னையில் உள்ளது. இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் மட்டும் மீதம் உள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்ததும் சிம்பு, டிசம்பர் முதல் பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்