மாநாடு பட வேளைகளில் இருக்கும் போதே மன்மத லீலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சிம்புவுக்கு இது ஒரு மாஸ் கம்பேக் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை வைத்து வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்கிற பேச்சு கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. இந்த வேளையில், தற்போது எந்த கதையும் அவர் முடிவு செய்யவில்லையாம்.
கொஞ்ச நாள் முன்னர் தான் அவருடைய தாய் இறைவனடி சேர்ந்தார். அவருடைய அஸ்தியை இன்னும் காரைக்காமல் வைத்துள்ளாராம். இனி அந்த சடங்குகளை மேற்கொள்ள உள்ளாராம். அதன் பிறகு, தான் அடுத்த கதை, ஹீரோ என செயல்பட தொடங்குவாராம் வெங்கட் பிரபு.
இதற்கிடையில், மாநாடு உருவாகி கொண்டிருந்த அதே வேளையில் மன்மத லீலை எனும் திரைப்படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இனி அந்த பட வேலைகளை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.