பாலாவின் 'வர்மா' ட்ராப்!! புதிய இயக்குனரை கொண்டு மீண்டும் படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டம்!!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அர்ஜூன் ரெட்டி' இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’ இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இயக்குனர் பாலா இயக்கி வந்தார். இந்த படத்தை இ4 என்டெயிர்டெயின்ட்மென்ட் தயாரித்து இருந்தது.

unknown node

இப்படத்தின் பாடல், டீசர், ட்ரெய்லர்  என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் ட்ராப் செய்யப்பட்டது என படதயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் முடிந்து படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனத்திற்கு, படம் திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் இப்படத்தை புதிய இயக்குனரை வைத்து முதலில் இருந்து படமாக்க உள்ளனர். அதிலும் ஹீரோ விக்ரம் மகன் துருவ் விக்ரம்தானாம். ஆனால் மற்ற டெக்னீசியன்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU