வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு வீடியோ எப்போது ஒளிபரப்பு செய்யுப்படும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழா
‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் உரிமையை சன்டிவி நிறுவனம் வாங்கி இருந்ததால் மற்ற மீடியாக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், விழாவிற்கு வருபவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியான நிலையில், அனைத்தும் சமூக வலைதளபக்கங்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.
இதனையடுத்து, வாரிசு இசை வெளியீட்டு விழா எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என காத்திருந்த ரசிகர்களுக்கு சன் டிவி சூப்பரான அறிவிப்பை கொடுத்துள்ளது. அதன்படி, வாரிசு” திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா.. ஜனவரி 1 மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என சன்டிவி நிறுவனம் ப்ரோமோ ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது.
unknown nodeவாரிசு
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
படத்தில் விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா மாந்தனா, சங்கீதா க்ரிஷ், சம்யுக்தா கார்த்திக், ஷாம், சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, யோகி பாபு, குஷ்பூ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ட்ரைலருடன் கூடிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.