விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் ஆலிவ் பச்சை (Olive Green) சட்டை வெள்ளை நிற ஃபேன்டடில் சிம்பிளாக வந்துள்ளார்.
unknown nodeவிஜய் அரங்கத்துக்குள் நுழைந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் தளபதி…தளபதி என கர கோஷமிட்டனர். பிறகு விஜய் அங்கு வந்திருந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கையை கொடுத்தார். பிறகு மேலே ஏறி ரசிகர்களுக்கு அன்புடன் கையை அசைத்துள்ளார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeகிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருவதால் ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் கூடியுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு விஜய் என்ன குட்டி கதை கூற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.