1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeஇந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான கதாபாத்திரத்தினுடைய போஸ்டரை வெளியீட்டு வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில் இன்று காலை படத்தில் இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா கதாபாத்திறத்திற்கான போஸ்டரி வெளியீடபட்டது. இதனை நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருக்கு கார்த்தி வந்தியத்தேவனாக டிவிட்டரில் அளித்த பதிலில், ” இளவரசி, நீங்கள் இருக்கும் லைவ் லொகேசனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை உங்களிடம் அளிக்க வேண்டும்” என கலாய்த்துள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
unknown node