மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

unknown node

இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

unknown node

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்று வைகைப்புயல் வடிவேலு இணைந்தார். இதனை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை வரவேற்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node