வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சுந்தர்.சி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் தலைநகரம். அதில் படத்தை விட படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேமஸ்.
தற்போது அந்த நாய் சேகர் தலைப்பை மட்டும் மையமாக கொண்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. அந்த படத்தையும் சுராஜ் தான் இயக்குகிறார். வைகைபுயல் நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகனாக களமிறங்குகிறார்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது. வடிவேலுவின் குரலில் ஹே ஹவ் ஆர் யு என அவருக்கே உரித்தான பாணியில் பேசியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைகைப்புயல் மீண்டும் களத்திற்கு வந்துவிட்டார் என்கிற உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளது.
unknown node