#VaathiRaid: "இன்னோரு தடவ பசங்க மேல கை பட்டது" மாஸ்டர் ப்ரோமோ-3

The 3rd promo of the master movie starring Vijay has been released.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 3வது ப்ரோமோ வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் எதிப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

தற்போது, மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த இரு தினங்கள் வெளியான மாஸ்டர் படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் நேற்று வெளியானதில் “முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” டயலாக் இடம் பிடித்திருந்தது.

தற்போது, மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், “இன்னொரு வாட்டி பசங்க மேலே கை பட்டது” என ‘VaathiRaid’ பாடலில் வரும் கல்லூரியில் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

unknown node