நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇதில் நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தற்போது வாத்தி படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்-அந்த வதந்தி விரைவில் உண்மையாக போகிறது… ஒருவழியாக சித்தார்த்திற்கு விரைவில் டும்…டும்…டும்.!
unknown nodeஇந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள். வாத்தி திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார்.
unknown nodeதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.