இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபடம் வெளியாக இன்னும் 1 மாதம் மட்டுமே இருப்பதால், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் மே 15-ஆம் தேதி படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது படத்திற்கான முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடல் வரும் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
Firing up Vikram first Single on May11th #VikramFirstSingle #VikramFromJune3 #KamalHaasan@ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/UHMLsA74gP
— Raaj Kamal Films International (@RKFI) May 8, 2022